கர்வமாய் ஒரு பிரம்மா

இதழ்விரித்த அந்த ஒற்றைரோஜா
இதமாய் சிரித்தது என் மனதோடு
என் இதயம் துள்ளியது கர்வத்தோடு!

இன்றல்ல நேற்றல்ல தினந்தினமாய்
பற்களில் ஓவியம் தீட்டியபடி
ஆசையாய் அமைதியாய் ரசித்த நாட்கள்

முதலிலை அரும்பிவிட்ட சந்தோசம்
முழுநாளும் அசை போட்டேன்
மெல்லிசையாய்!
முகத்தோடு முகம் வைத்து பூங்காற்று
முத்தமிட
அள்ளிப் பருகியபடி அருகில் நான்

நான் வைத்த கண்திருஷ்டி காரணமாய்
நாள் மிகஆனது உள்ளோடி உயிர்வர!
காத்திருந்தேன் காத்திருந்தேன்
யுகம்யுகமாய்
முதலரும்பு முகம் காட்ட

மொட்டுவிட்ட முதலரும்பு
மெட்டமைத்தது
என் கண்ணுக்குள்ளே!
பூமலர்வது பரம ரகசியம்
என் தலைமுறை வாதங்கள்
வீழ்ந்த்தது என் விழிகளிலே!

தவழ்ந்தது நிமிடங்கள்
தவமிருந்தேன் நான்...
என் கனவுக்கன்னியின்
பூப்பு நீராட்டுக்காக!

அழைப்பு வந்தது
அந்தி மாலையில்
அழகிய நீராட்டு....
அதிகாலையில்!

என் விழி மலர்ந்தது அங்கே
இதழ் விரித்த அந்த
ஒற்றை வெள்ளை ரோஜா
இதமாய் சிரித்தது
என் மனதோடு!

என் இமைகள்
துள்ளியது கர்வத்தோடு!
என் இதயம்
அள்ளியது கவிதையாய்!

எழுதியவர் : சிவகாமி அருணன் (13-Nov-14, 12:21 pm)
பார்வை : 131

மேலே