பாழாய்ப்போன சுகம் -ரகு

அப்படியென்ன
அவசியமாகிறது

ஒளிந்தொளிந்து
வாங்கவேண்டிய
நிர்பந்தம் என்ன

விடைஎதிர்பாராது
விருட்டென்று
நகர்ந்து தனித்தேன்

வாங்கிய அந்த
ஒற்றைச்சிகரட்டில்
தீ ஒற்றினேன்

இழுப்பில் வேகம்
விடுப்பில் விவேகம்
என்னிடம்

பாவம்
எப்பாடுபட்டதோ
விரிந்து சுருங்கும்
நுரையீரல்

புகைவளி பரவ
குரல்வழி வெப்பம்

இருமல்
தெறித்தேன்
விழிகள்
பனித்தேன்

மீண்டும் - பல
மென்னிழுப்பில்
திளைத்தேன்

புகைவழுத்தது
சிகரெட்டு சிறுத்தது

கீழிட்டுக்
கால்கொண்டு
மிதித்துக்
கனல் அணைத்து
நடைதொடர்ந்தேன்

புதிதானப்
பழக்கங்கள்
பயனோ பலனோ
தெரியாது

நிச்சயமாகவே
பாழாய்ப்போன
சுகந்தானது !

எழுதியவர் : அ.ரகு (14-Nov-14, 6:45 pm)
பார்வை : 69

மேலே