சுய நலம்

நலம் விசாரிப்பதில் கூட சுய நலம் காட்டும் மாசடைந்த சமுதாயம் மனித நேயமற்று மனிதர்களை அழிக்கும் உயிர்க்கொல்லியாய் இன்றைய சூழ்நிலையில் உலா வந்து கொண்டு இருக்கின்றது

. சுகாதாரமற்ற சுயநலத்தின் ஜனனம் எதில் ? ஆய்ந்து பார்த்ததில் = வளர்ப்பு முறை தான் அதிக மதிப்பெண்கள் பெறுகின்றது .. "நான், எனது" என்கின்ற இருவரும் தான் சுயநலத்தின் பெற்றோர்கள். வட்டம் போட்டு தான் உரிமம் எடுக்கின்றனர் வாழ்க்கையை தொடங்குவதற்கு .

குழந்தை பிறந்தவுடன் என் மகன், என் மகன் தான் என்னை விட்டு போய் விட கூடாது என பொத்தி பொத்தி வளர்த்து மன வளர்ச்சியையும் பொத்தி விடுகின்றார்கள் . சிறிய வட்டம் தான் இயற்கையான வாழ்க்கை என இயற்கையை உணர வாய்ப்பு இல்லாமல், நட்பு வட்டம் இல்லாமல் சுயம் எனும் ஒரு பெரிய வட்டத்தை வளர விடமால் சிதைது விடுகின்றார்கள்.

திரும்பவும் ஆய்ந்தால் பாதுகாப்பற்ற தன்மை தான் அனைத்திற்கும் மூல காரணம். தன்னம்பிக்கை இல்லாததால் எதையாவது ஒன்றை பற்றி கொள்ள வேண்டும் என துடிப்பு . இதற்க்கு விலங்காய் கணவனும் குழந்தையும்.. ஒரு விதமான மன நோயுடன் வாழ்ந்து கொண்டு இருக்கும் இவர்கள் தன் குறைகளை மறைப்பதற்காக வெளியில் சிரித்து சிரித்து பேசி எல்லோருடன் பழகுவது போல் பாசாங்கு செய்து தன்னை தானே ஏமாற்றி கொண்டு தன்னை நம்பி இருக்கும் கணவனையும், குழந்தையும் தூக்கில் இடுகின்றார்கள்.

கீதையில் கூறியது போல் எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையது .ஆகின்றது. என்பதை உணரும் வாய்ப்பை தன் மகன் திருமணம் ஆனவுடன் தான் புரிந்து கொள்கின்றார்கள். ஆனால் மனம் விரிவடையாமல் வளர்க்க பட்டதால் மகனும் ஒரு சுய நல தேனி கூட்டை உருவாக்க முனைகின்றான்.

ஒரு குழந்தை வளரும் பருவம் தான் அவனை முழுமையான வாழ்க்கையை வாழ வழி வகுக்கின்றது. வெளி உலகம் தெரிந்தால் தான் அவன் அனுபவங்கள் மூலம் நிறைய செய்திகளை மனதில் ஏற்றி கொள்கின்றான் .நட்பு வட்டம் மூலம் விட்டு கொடுக்கும் தன்மையை வளர்க்கின்றான். தோல்வியை தழுவும் போது தான் சிந்திக்க தொடங்குகின்றான் .விளையாடும் போது தான் மனம் உடலும் நிறைவான வளர்ச்சி அடைகின்றது. மாறாக சிறிய வட்டம் பாதுகாப்பாக இருந்தாலும் தெரிந்தாலும் மனித சங்கிலியை அறுத்து விடும்.

தவிர்ப்போம் சுய நலத்தை !
வளர்ப்போம் மனித நேயத்தை !
உருவாக்குவோம் சிறந்த சமுதாயத்தை !

கிருபா கணேஷ்
==================================================

எழுதியவர் : kirupaganesh (14-Nov-14, 11:27 pm)
Tanglish : suya nalam
பார்வை : 576

மேலே