சொல்லித்தா
எனக்கு பல்லு துளக்க தெரியாது
கற்று தந்தாள்
எனக்கு குளிக்க தெரியாது
கற்று தந்தாள்
எனக்கு கால் கழுவ தெரியாது
கற்று தந்தாள்
எனக்கு சாப்பிட தெரியாது
கற்று தந்தாள்
எனக்கு துணி உடுத்த தெரியாது
கற்று தந்தாள்
எனக்கு நடக்க தெரியாது
கற்று தந்தாள்
எனக்கு பேச தெரியாது
கற்று தந்தாள்
எனக்கு அழ தெரியாது
அவள் இறந்து அதையும்
கற்று தந்தாள்
இன்று எனக்கு எல்லாம் தெரியும்
அவள் இல்லாமல் எப்படி வாழ்வது என்பதை தவிர
அதை மட்டும் கற்று தராமலே போய் விட்டாள் ?