உன் நினைவின் அலைகளிலே நீந்துகிறேனடி 555
![](https://eluthu.com/images/loading.gif)
உயிரானவளே...
முதன் முதலில்
எனக்கு நீயும்...
உனக்கு நானும் பரிசளித்த
ரோஜா செடி...
என் வீட்டு தோட்டத்தில்
பதியம் வைத்தேன்...
ஒற்றை ரோஜா
பூக்கையில்...
நந்தவனத்தில் உன்னுடன்
கழித்த பொழுதின் நினைவுகள்...
கிடைக்குமா மீண்டும்
ஓர் சந்தர்பம்...
முள்ளாய் என் மனதில்
ஏக்கம் பரவுதடி...
உன் நினைவுகள் எல்லாம்
என் மனதில்...
கடிகார முற்களை போல
ஓடிகொண்டே இருக்குதடி...
இடை விடாமல்
உன் நினைவுகள்...
உன்னை மறந்துவிட
எப்படி முடியும் என்னால்...
உன் நினைவின்
அலைகளிலே நீந்துகிறேனடி...
கரைதொட முடியாமல்.....