ஒரு காதல் கட்டுரை
ஒரு காதல் கட்டுரை!!!
உன் முகத்தை பார்த்து
முகவுரை எழுதினேன்
முகவுரை எழுதும் போது உன்
முகம் முழுமையாய் தெரிந்தது...
பொருளுரை எழுதும் போது
உன் பொறுப்பும்.பொறுமையும்
நன்றாகவே தெரிந்தது..என்னால்
பொறுக்க முடியவில்லை...
முடிவுக்கு வந்தேன்
முடிவுரை எழுத..என்னால்
முடியவில்லை..கட்டுரையை
முடிக்க...தொடர வேண்டுமாய்..
உள்ளம் துடிக்கிறது.. நீ உன்
உள்ளத்தில் இடம் தருவாயா??
உன்னோடு நான் வாழ
உணமையாக நேசிக்கிறேன் உன்னை.
_______________________________________________________________________________