எனக்குள் காதல் மழை

அன்பே ...
சாரல் மழையில்
நனைந்த நான்
யோசிக்கிறேன்...

கருநீரும் உன்கரம்பட்டு
குடிநீராகையில்
நானும் என்னாகுவேனடி !

ரசாயன திராவகத்தை
உனக்குள் ஒளித்துவைத்து
கண்ணாலும் உதட்டாலும் தெளிக்கிறாய்
என் ஆண் ஆணவத்தை
அடியோடு அழிக்கிறாய் !!

பஞ்சு பாதத்தில்
தஞ்சமடைந்தேனடி
கொஞ்சும் கொலுசாய்
நான் மாறத் துடித்தேனடி !!

இமை மூடி நீ உறங்கையில்
உன் அறைக்குள்
இருளாகி கிடப்பேனடி !!

உன் மேனி மூடிய திரைசீலை
உன் மானம் காக்கும்
அதுவாய் நானாக ஆவல் கொண்டேனடி !!

மலர் தேடி வண்டு செல்லும்
மகரந்தத்தை கொண்டு செல்லும்
மனம் தேடி வந்தேனடி
மகிழ்ச்சியை தருவாயடி !!

எழுதியவர் : கனகரத்தினம் (17-Nov-14, 8:29 am)
பார்வை : 72

மேலே