தாயின் அன்பு முத்தம்

அன்பு என்பது தாயைப் போல்
அத்தையோ அன்பானவள்
தாயின் அன்பு முத்தம் என்றும்
விலையில்லா கடல் முத்துப்போல்
அந்த அன்பான முத்தம் நீ பெற
அதற்க்கு நிகரான பரிசொன்று
தர இம்மண்ணுலகிலுமில்லை,
அவ்விண்ணுலகிலுமில்லை.
ஆனால், ஒன்று மட்டுமே உள்ளது
அது உன் மெய்யான அன்பு தான்.
சின்ன சின்ன காரியத்தில் கூட
தாயை மகிழ்விப்பவனாய் இரு
தாயின் அன்பு முத்தம் தானே கிட்டும்.
தாய் சொல் கேட்பவனாய் இரு
அவள் ஆசையை முடிப்பவனே இரு
அவளை வணங்குபவனாய் இரு
அவளை மதிப்பவனாய் இரு
அவளை கவனிப்பவனாய் இரு
அப்போதே அவள் அன்பை பெறுவாய்.
அவள் அன்பு முத்தமும் பெறுவாய்.
பின் அதன் வலிமைக்கும்,
உன் வாழ்க்கைக்கும், என்றும்,
என்றென்றும் உரியவனாவாய்.....................

ரோவர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப்பக்கல்லூரி
எலம்பலூர் , பெரம்பலூர்

எழுதியவர் : ப.கலியமூர்த்தி (17-Nov-14, 8:50 pm)
Tanglish : thaayin anbu mutham
பார்வை : 212

மேலே