சொட்டு நீர் சேமிப்பு

சொட்டு சொட்டாய் சிந்தும் நீரை
சொற்ப நேரத்தில் சேமித்தால்
சொம்பும் நிறைந்திடுமே..ஒரு
சொம்பு நீரும் ஒருவருக்கு பயன் தருமே..

சொட்டும் நீர் சேமிப்பு
சொல்கிறது அரசு
சொட்டும் நீரை சேமித்தால்
சொர்க்கமாய் வாழ்ந்திடலாம்...

சொல்வதை கேளுங்கள்
சொட்டு நீர் பாது காப்பு
சொல்வதை விட
செயலில் காட்டிடுவோம்..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (19-Nov-14, 10:36 am)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 135

மேலே