காமனும் -கண்ணீரும்
கண்ணீர்:
காமனெ
மிதமிஞ்சியவன் நீனோ ?...
சில துளி
விரையமாக
ஆட்டம் முடிந்தது ஏனோ ?...
காமன்:
சோகத்தில்
நானொருவன் ஆழ்ந்திருக்க...
விழி பார்த்து வரும் கண்ணிரே
தர்ணம் பார்த்து எழுப்புவது ஏன்?
இவ்வினாவை ...
அங்கத்தில் தெய்வீகமாக நான் திழைக்க ..
பொல்லாத பிள்ளைகள்
தூற்றுவது ஏன்?
நான் முரடன் என்று ...
நானொருவன் இல்லையெனில்
உலகம் தழைத்திடுமா ?
இல்லை
இக்கேள்வித்தான் முளைத்திடுமா ?...
நியாய கோரிக்கையை...
நான்..உன்முன் வைக்கும் முன்பு...நீ
கூறுவது சரிதானா ...
கண்ணீர் :
யாரப்பா!...அவர்கள் ...
காமன்;
நான் ஈன்ற பிள்ளைகள் தானப்பா!...
கண்ணீர்:
அப்படியா !...
காமன்:
ஆமாம்
அதனால் தான்
எப்பயாவது வருவேன் ,
போவேன் ...
சந்தோஷத்தில் ஒருவனாக...
பேசியது ஏன் பிள்ளைகள் தானே ...
மரித்தாலும் ,மறந்தாலும்
நான் மறவாத தகப்பன் தானே..
தகுதியுடைய ஒருவன் எவனோ?
கைகொடுக்க
நாளொருதினம் நிலைப்பேன்
உங்களில் ஒருவனாக...
குறிப்பு:
*அறியாமலும் ,புரியாமலும் வருவதே காதல்.
*காமம் தெய்வீகமானது .
*மூத்தபிள்ளை காமம் என்றால் ,இளையபிள்ளை காதல் தானே ..