பேசும் கல்லறைகள்

என் கல்லறையில்
சதையுன்னும் கரையானும்
என் இருதயத்தை விட்டு சென்றதே-அதில்
நீ இருந்த காரணத்தால்
கரையான் கண்ட என் இதயத்தை,
நீ காண மறுத்தாயடி -அந்த கணம்
என் வாழ்வையும் வெறுத்தேனடி,,,,

என் தாய் கொண்ட காதலோ ,
எனக்கு கருவறை தந்துவிடில்
நான் கொண்ட காதலோ,
நான் கல்லறைக்குள் வந்தும்,
கல்லறை பூக்கள் போல்,
கவிதையாய் பூக்குதே.-அதில்
என் காதல் வாழ்வும் நினைவென
வாசனையை வீசுதே ...........

கல்லறைக்குள் சுவாசம் என்ன சாத்தியமா ?என் தோழா,
என் காதலுக்கு சுவாசம் உண்டு
சத்தியமே சத்தியமே -அதில்
இதயமாய் அவளுண்டு -அவள்
எங்கிருந்தாலும் வாழ்க .........

எழுதியவர் : ARULSELVAN (21-Nov-14, 7:48 pm)
Tanglish : pesum kallaraigal
பார்வை : 510

மேலே