ரௌத்திரம் பழகு - வேலு

சமுதாயத்தை தோலுரிக்கும்
சக மனிதனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

சாக்கடை அலசும் சாதாரன
மனிதனோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்

மடியேந்துபவனுக்கு மாடியில் நின்று எச்சில்குட துப்பாத
சாதனை மனிதனோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்

நிறத்தில் பிரித்து மனிதாபிமானத்தை பார்க்கும் இந்த சமுதாயத்தை
எந்த நிறம் கொண்டு மறைப்பது !

கணிப்பொறி உலகில்
இன்னும் ஜாதி புத்தகத்தை
சில புரட்டிக்கொண்டு இருக்கிறார்கள்!!!

இந்த வெண்ணிலவு அவர்கள்
வீடுகளை மட்டும் இருளை வீசுகிறதா !!

இந்த சமுதாயர்த்துக்கு
விடியலுக்காக விளக்காக வா நாம் ஒளிவீசலாம்

எழுதியவர் : வேலு (22-Nov-14, 11:30 am)
பார்வை : 252

மேலே