என்னை எரிக்கிறாய்

என்னை எரிக்கிறாய்...

உன்னை உரித்தால் நீ
என் கண்ணை எரிக்கிறாய்...
உன்னை சுவைத்தால்
என் வயிற்றை எரிக்கிறாய்...
உன் விலையை கேட்டால்
என் மனதை எரிக்கிறாய்...
நீ ஒரு மருத்துவ
குடும்பத்தை சேர்த்தவள் என்பதால்
உன்னை சமையலில் சேர்த்தோம்..
வரும் காலத்தில் நீ எங்கே???
இருப்பாய் என்பது கேள்வி குறிதான்.
தயவு செய்து தங்கத்துடன்
சேர்த்து விடாதே??

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (22-Nov-14, 12:01 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 53

மேலே