இரண்டடுக்கு ஆகாயம் -- வேலு

அப்படி இப்படியாக
இழுத்து செல்லப்பட்டு என் நினைவுகளை
குழைந்து
மழையாக பொழிகிறேன் மனதில்
முதல் பார்வைக்குள்
முழ்கி இன்னும் இன்னும் தெளிவு பெறாமல் !!
வானவில்லை உடைத்து
அங்கும் இங்கும் பூசி
அழகு சொட்ட சொட்ட நடை பயிலும்
இரண்டடுக்கு ஆகாயம் அவள் !!!!!