அவளுக்கு
அலங்கரித்துக்கொள்வது அலுத்துப்போனது அவளுக்கு
எத்தனை முறைதான்
பொம்மையாய், சிலையாய், தேவதையாய்
தரிசனம் தருவாள் மாப்பிள்ளை வீட்டாருக்கு?
மகாலட்சுமி மாதிரி இருக்கிறாள் என்கிறார்கள்!
பொருத்தங்கள் அனைத்தும் அருமை என்கிறார்கள்!
அந்த நகை விஷயத்தில் மட்டும்
இத்தனை அம்சங்களும் அடிபட்டுவிடுகிறது
மாப்பிள்ளை வீட்டாருக்கு!