வைகறையில்
மெல்லவே கீழிறங்கி வெண்மதியும் மறையும்
பையவே மேலெழும்ப பரிதிமுகம் தெரியும் !
சின்னஞ் சிறியகுயில் பூபாளம் இசைக்கும்
செங்கொண்டைச் சேவல் குரல்கொடுத்து எழுப்பும் !
சத்தமின்றி பூக்களும் மெல்லிதழ் விரிக்கும்
முத்தமிட்ட தென்றலால் கிளைகள்தலை அசைக்கும் !
வளைந்துசெல்லும் நதியும் மதுரகீதம் பாடும்
மலையருவி இரைச்சல் நிசப்தம் கிழிக்கும் !
நுனியிலையில் பனித்துளி அசையாது நிற்கும்
கனியுடைந்து நறுமணம் காற்றிலெங்கும் நிறையும் !
அதிகாலைக் கனவில் நித்திரையும் கலையும்
இமைதிறக்க மறுத்து இன்னுந்தூங்க விழையும் ....!!!