பெண்களின் சுதந்திரம் தொலைவது எங்கே -கயல்விழி

புரட்சி பெண்கள்
பாரினிலே
போராடி உரிமை வென்றாலும்

அடிமைப்பெண்கள்
இன்றும்
அடுக்களைக்குள்
அவதியில் தான்

பெண் சுதந்திரம் கேட்டோம்
ஆண்களிடம்
உரிமைகள் பறிப்பது
பெண்கள் இனம்

அங்காங்கே காமத்தில்
சில ஆண் வெறிநாய்கள்
அலைந்தாலும்
கடித்து குதறுவது
சில பெண் நாய்கள் தான்

மகனை விற்று
மருமகள் வாங்கி
மானத்தை விட்டு
வாழ்கிறாள் மாமியார்!

மறுவாழ்க்கை தேடி
மணமாலை சூடி
வாசல்வரும் முன்னமே
இராட்சசி ஆகின்றாள் சித்தி .!

மனம்பரித்த மணவாளன்
கைகோர்த்து
மணவாழ்க்கை போகும்
முன் முற்றுப்புள்ளி வைகிறாள்
நாத்தனார் (மச்சாள் )

எங்கே மறையுது
பெண் சுதந்திரம்
யார் பறித்தது எம் சுதந்திரத்தை .?

போராட்டம் வேண்டாம்
சமுதாயத்தோடு
புரட்சி செய்யுங்கள்
புகுந்த வீட்டோடு

பெண்ணுக்கே பெண்ணே
எதிரி என்றால்
புரட்சி என்பது பொய் தானே

திருத்திடுவோம்/ திருந்திடுவோம்
பெண்களை நாம்
பின் சுதந்திரம் கேட்போம்
ஆண்களிடம் .

எழுதியவர் : கயல்விழி (26-Nov-14, 8:57 am)
பார்வை : 1466

மேலே