கோழி சமைச்சு காத்திருக்கும் புள்ள

கறி கோழி சமைச்சு வெச்சு
காத்திருக்கும் காட்டு குயிலே.....
களனி காட்டுல வேல இருக்கு
சோறு திங்க இன்னும் நேரம் வரலே....

அத்த மக ஆசையா தான்
அல்வாவும் கிண்டி தர....
அள்ளி திங்க ஆசை தான்
எங்காத்தா வையும் வேணாம் புள்ள...

காஞ்சி பட்டுடுத்தி களைய தான் நீ இருக்க
கடத்தி போக தோணுதடி.....
ஒங்க அப்பன் வீச்சருவா
கனவுலையும் என்ன சுத்தடி.....

கொஞ்ச காலம் பொறுத்துக்கோ புள்ள...
களம் கனிஞ்சு வரும் மெல்ல...
கடமை கெடக்கு கொஞ்சம்...
அது வர காத்திரு புள்ள....

ஆக்கி வெச்ச சோறு ஆறும் முன்னே வந்திடுறேன்....
அத்த மக உன்ன என் சொந்தம் ஆகிடறேன்....
கண்டதையும் நெனச்சு கலங்காத
கல்யாண சேதி வரும் தயங்காத....

எழுதியவர் : sri (27-Nov-14, 10:53 am)
பார்வை : 144

மேலே