உன் அன்னையின் சுமை

உன் பிறப்புக்கு முன்
பனிக்குடம்….!

நீ பிறக்கும் போது
உயிர் போகும் வலி….!

நீ பிறந்தபின்
தாய்ப்பால்….!

உன் பிஞ்சு வயதில்
நெஞ்சினில்….!

உன் குளியலின் போது
இரு கால் சேர்ந்த இடுக்கினில்….!

உன் மழலைப் பருவத்தில்
மடியினில்….!

நீ நடை பயிலும் போது
தடுமாறி விழுகையில்,
கையினில்….!

நீ அன்னம் உண்ண,
இடையினில்….!

உன் தேகம் குன்றிகையில்
தோளினில்….!

நீ விளையாடும் வயதில்
முதுகினில்….!

நீ மழலை பேச்சுடன்
பள்ளிக்குச் செல்லுகையில்
உன்னையே….!

உன் ஒழுக்கம் குன்றிகையில்
அவமானத்தை…..!

நீ கல்லூரிக்குச் செல்லுகையில்
கவலையை….!

உன் திருமணவயதில்
மனக் கலக்கத்தை….!

உன் திருமணத்திற்கு பின்
உன் குடும்பத்தை….!

அவள் அகவை வயதில்
உன் அரும்புகளை….!

அவள் தள்ளாடும் வயதில்
தனிமையை….!

இவை அத்தனையும்
உன் நலனுக்காகச்
சுமந்தவளை...!
நீ சுமை எனக்கருதியதால்
கிடக்கின்றாள்
முதியோர் சுமைதாங்கியில்...!

கருவறையிலேயே
உன் உயிரை சுமந்ததனால்...!
இச்சுமையெல்லாம்
அவளுக்கு சுமையல்ல
சுகம்தானடா...!

ஏழேழு ஜென்மம் எடுத்தாலும்
இச்சுமைக்காகக்
காத்திருப்பாள்...!
அவள் அன்னை என்ற
பட்டத்தைச் சுமந்ததினால்...!

எழுதியவர் : பெ.கோகுலபாலன் (27-Nov-14, 7:37 pm)
Tanglish : un annaiyin sumai
பார்வை : 312

மேலே