கண்ணில் ஒரு வலி இருந்தால் 555

உயிரானவளே...
காற்றைப்போல் தொடர்ந்து
வரும் என்னை...
விலகியே செல்ல
நினைக்கிறாய்...
விண்ணில் இருந்து வரும்
மழைத்துளி உனக்கு பிடித்ததால்...
சந்தோசமாய்
நனைந்து செல்கிறாய்...
உனக்கு என்னை
பிடிக்கவில்லை என்பதால்...
கண்ணீரில் நனைந்து
செல்கிறேனடி...
உன் மனதில் எதோ ஒரு
மூலையில் வாழ்ந்துவிட்டு போகிறேன்...
உன்னிடம் காதலை
சொன்னவன் என்று...
என்றேனும் என்னை
நினைத்து பார்ப்பாய்...
எவனோ ஒருவன் என்று...
அதுபோதுமடி நான்
உன்னை நேசித்ததிற்க்கு.....