விழியதிகாரம் -10 -சந்தோஷ்

விழியதிகாரம்.

அந்த கண்களில்
எந்த மந்திரமையோ?
அந்த கண்ணில்
எந்த சுந்தரயிளமையோ?

சந்தநடையில் அவள்
விழிக்குடுவையில்
கவிப்பாடும் அந்த முழிகள்..!

விழிக்கோட்டை வாசலில்
அலங்கார வளைவாய்
வசீகரத்திடும் அந்த புருவங்கள்.

அடடா..! அடடா...!
வர்ணிக்க வார்த்தைகளின்றி
சங்க இலக்கியங்களை
தேடித்தேடி படித்திட்டேன்

அய்யகோ...!
என்செய்வேன் ? - அன்று
படைத்திட்ட புலவர்களிடமும்
கற்பனை வறட்சியாம்..!

இவளைப்போல
ஒரு விழியழகியை
அன்று
கம்பனும் பாரதியும்
வள்ளுவனும் இளங்கோவும்
கண்டு வியந்திருக்க மாட்டார்கள்...!



என் விழியதிகாரியே.......!

காதலோடு நீ எறியும்
உன் விழிப்பார்வையின்றி
குருடனாகி விடுவேனோ??

மங்கை நீ தரும்
மாயை மயக்கத்தில்
மன்னவன் நான்
சென்னை மெரீனாவில்
காத்திருக்கிறேன்...!

வா........! வேல்விழியாளே..!
நானும் நீயும
பார்வை ஈட்டியெறிந்து
ஒரு விழிப்போர்
ஒத்திகை நடத்திடுவோம்..!


ஏய் மெரினாவே...!
மாண்புமிகு கண்ணகி சிலையே..!

எங்களுக்குள் காதலில்லை
காதலுக்கான
மாற்று சொல்லற்று
விக்கி சிக்கி தவிக்கும்
விசித்திரமான வியாக்கின
நேசக்காரர்கள் நாங்கள்...!


-------------------------------




-இரா.சந்தோஷ் குமார்




விழியதிகாரத்தின் ”விழிப்போர்” தொடரும்.

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (29-Nov-14, 10:17 pm)
பார்வை : 89

மேலே