சுகமான சுமையாக காதல்
மதி மயங்கி
விழி மயங்கி
நான் மயங்கி
நிட்கும் வேளையிலே
வானும் மயங்கிப்
போகின்றதே அந்தி
மாலையாய்..........
என் இதழ் மலர்ந்து
என்முகம் மலர்ந்து
என் உள்ளம் மலரும்
வேளையிலே அல்லியும்
மல்லியும் சேர்ந்து
மலந்து வருகின்றதே
அந்தி நேரம் கண்டு.....
பட்டுச்சேலை கட்டி
பள பளக்கும் நகை போட்டு
பருவப் பெண் நான் நாணத்துடன்
காத்திருக்கையிலே நீலத் தோகையில்
பொட்டு வைத்து அமைதியாக
பக்கம் வந்து நின்று மயிலும்
எட்டி எட்டிப் பார்க்கின்றதே......
வட்ட நிலா வரும் நேரம்
வெட்ட வெளியெல்லாம
ஒளி பரப்பி விடுமே கிட்ட
வரும் என்னவரை விட்டு
விடாமல் தொட்டு விடுமே
தென்றலும்..........
தீண்டும் தென்றல்
தூண்டி விடுமே
அவர் தூக்கத்தை
தூங்கி விடுவாரோ
இல்லை என் ஏக்கத்தை
புரிந்து விடுவாரோ.....
ஓடை நீர் போல்
என் உடல் எங்கும்
ஒரு பட படப்பு ஒரு
கிளு கிளுப்பு உள்ளே
பூக்குது மத்தாப்பூ.....
என் நினைவைக் கலைப்பது
போல் ஊந்து போனது
சாரைப் பாம்பு
சடாரென வந்தது
அரண்மனை நினைப்பு......
இ.சாந்தா