அதே தெருவில்
தெருவோரம் பழக்கடை நடத்தி பிழைத்து வந்தாள் அந்த ஆதரவற்ற பேரிளம் பாட்டி. கோடிகோடியாய் சேர்ப்பதில் முதலிடம் பிடிப்பதற்காய் நாடெங்கும் தொடங்கிய அந்த பணம்படைத்தவரின் நவீன பழக்கடைகளில் ஒன்று அதே தெருவிலும் தொடங்கப்பட்டது. மாதங்கள் ஆறாயின. முதலிடம் நுகரும் தூரத்தில் இருக்க ஆதரவற்ற பாட்டியின் இறுதி ஊர்வலம் அதே தெருவில் சென்று கொண்டிருக்கிறது...!!!