என் தாயின் கருவறையில்
இருட்டறை என்றாலும்
இருந்தேன் அங்கே
இன்பமாய்..இலவசமாய்.
இருப்பு கொள்ளாமல்
இங்கே வந்தேன்
இன்னல்கள் பல கண்டேன்.
புவியரையில் புண்ணானது
என் உள்ளம்.கருவறையில்
கரும்பானது என் நெஞ்ஜம்..
காலம் முழுவதும்
கருவறையில் இருக்க
ஏங்குகிறது என் உள்ளம்..
மீண்டும் கருவறையில்
குடி இருக்க இடம்
தருவாளா??என் அன்னை..