நடிகன்
போடுவது வேடம் நாடகத்தில்
வாழ்வது நிஜமான கோலத்தில்
இடையில் அவன் தேடுவது பணம்
நடிகன் என்ற தொழில் அவன் விரும்பி எடுத்த கலை
அதுதான் அவன் வேலையும்
நடிக்கும் போது அவன் சொல்வது செய்வது எல்லாம்
சொல்லிக் கொடுக்கும் கற்பனை வளம்
ஆனால் வாழ்கையில் அவன் மனிதன்
மனிதன் நடிக்கும் போது விளையாட்டு
நடிப்பிலும் சில நல்லதும் கெட்டதும்
தெரிந்து கொள்ள வாய்ப்பு உண்டு
காதலும் கண்ணியமும் கடமையும் நேர்மையும்
காட்சிகளில் இடம் பெறும் நல் நோக்கமும்
நடிப்பையும் நாடகத்தையும் பெருமை கொள்ள வைக்கும்
வாழ்க்கையின் யதார்த்தத்தை சித்தரித்துக் காட்டும்
நாடகங்களில் நடிகனே பெயர் வாங்கும் பாக்கியம் கொண்டவன்
நடிப்புதான் மனிதனை ஈர்த்துவிடும்
எத்தகைய மனிதர்களையும் ரசிக்க வைத்து விடும்
ரசிகர்கள் இதயத்தில் நடிகன் நீங்கா இடம் பிடித்து விடுகிறான்
நடிகனுக்கு கோயிலும் கட்டத் தொடங்கி விடுவான் மனிதன்
அளவற்ற ரசிப்பினால் மக்கள் முட்டாள் ஆக்கப் படுகின்றனர்
நடிகன் வேடம் களைந்து விட்டால் சாதாரண மனிதன் தான்
நடிப்பு நவரசம் கலந்த அற்புதக் கலை
நடிகன் நம்மை மகிழ்விக்கும் ஆரோக்கியமான கலைஞன்