இன்பம் எல்லாம் இன்பம்

பறப்பதில் இன்பம்
உன்னை பார்ப்பதிலும்தான்!
மீண்டும் மீண்டும்
பிறப்பதில் இன்பம்
நீயே துணை ஆவதென்றால் !
இறப்பதில் இன்பம்
நீ இல்லையென்று ஆனபின்னால்!
அனைத்து ஆசைகளையும்
துறப்பதில் இன்பம்
நீ மட்டும் கிடைப்பதென்றால். !
மறுப்பதில் இன்பம்
உனையன்றி இன்னொருத்தி
எனை விரும்பி நின்றால் !
வெறுப்பதில் இன்பம்
உனையன்றி உலகமே
கிடைக்குமென்றால் !

எழுதியவர் : கருணா (2-Dec-14, 9:34 pm)
Tanglish : inbam ellam inbam
பார்வை : 319

மேலே