நாய் கடியில் இருந்து மாட்டாமல் தப்பிப்பது எப்படி

இரவு/பகல் இரு வேலைகளிலும் நாய்களின் நடத்தையில் பெரிதாய் வேறுபாடு கிடையாது. இரவில் தான் நாய்கள் அதிகம் ஆபத்தானது என்பது பொய், அது ஒரு மூடத்தனம் எனலாம். இரவில் மனித நடமாட்டம் குறைவு என்பதால் இருவரும் ஒருவர் கவனத்தில் மற்றொருவர் விழ அதிக வாய்ப்பு உள்ளது அவ்வளவே. எனவே எல்லா வேலையிலும் ஒரே விதிமுறைகளை பயன்படுத்தலாம்.


விதிமுறைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளும் முன் புரிந்துகொள்ள வேண்டியவை, நாய்களும் நம்மைப் போல் பூமியில் வாழ வந்தவை, அவை எந்த வித்த்திலும் நமக்கு தாழ்ந்தவை அல்ல. அவை பொதுவாக மிருதுவான குணம் கொண்டவை, குறிப்பாக மனிதன் மீது நட்புள்ளமும், பாசமும், எதிர்பார்ப்பும், நன்றியும் கொண்டு பழகுபவை. நம்மை கடிக்கவோ, உண்ணவோ அதற்க்கு அவசியம் கிடையாது. அவைகளை பயமுறுத்தும் போதோ, இடையூறு செய்யும் போதோ, குட்டிகளை பரிக்க முயன்றாலோ, தாக்க முயன்றாலோ, சந்தேகிக்கும் படி அல்லது வித்தியாசமான தோற்றத்தோடு வந்தாலோ தான் அவை ஒரு கிளர்ச்சி அடைந்த நிலைக்கு வரும்.

விதிமுறைகள்:

1) முதலில் (பயம் இருப்பவர்கள்) அவைகள் இருக்கும் பக்கம் போகவே போகாதீர்கள், குறிப்பாக கூட்டமாக இருக்கும் போது.

2) நாய்களை கடக்கும் போது, தைரியமான நடை இருத்தல் வேண்டும், முகத்திலும் உடலிலும் பயத்தை வெளிப்படுத்தக் கூடாது (உள்ளுக்குள்ள டங்குவாரு அந்தாளும் வெளிய காட்டக் கூடாது)

3) இதையும் தாண்டி நாய்கள் உங்களை பார்த்து கோபமாக குரைதாலோ, உங்களை நோக்கி வந்தாலோ, தயவு செய்து ஓடாதீர்கள், அசையாமல் நில்லுங்கள். முக்கால் வாசி நேரங்களில் நாய் கடி படுபவர்கள், நாய்களின் நோக்கம் அறியாமல் அவர்களாகவே தன்னை தாக்கப் போவதாக கற்பனை செய்து, அவர்களே ஓடி மாட்டிக் கொள்கிறார்கள்.

4) இதையும் கடந்து, கூட்டமாகவோ, தனியாகவோ உங்களை சூழ்ந்து கொண்டால், அப்போது அதே நிலையில் பயத்தை காட்டவே காட்டாமல் நில்லுங்கள்.

5) சில நேரங்களில் உடலுக்கு மிக நெருக்கமாக வந்து குரைக்கும், அப்போதும் அதன் பல்லோ நகமோ படாமல் இருக்க உங்கள் கையிலோ முதுகிலோ இருக்கும் பை அல்லது வேறு பொருட்களை கேடையம் போல் நடிவில் வைத்துக் கொள்ளுங்கள்.

6) பின் மெதுவாக, நகரத் தொடங்குங்கள். ஒருபொழுதும் ஓட முயற்ச்சிக்காதீர் (அப்புறம் உங்க உயிக்கு நான் பொருப்பில்ல). அப்படியே ஒவ்வொரு அடியாக நகர்ந்து சொன்றுகொண்டே இருங்கள். ஒரு குறிப்பிட்ட எல்லை வந்ததும் அவை தானாகவே நின்றுவிடும் இல்லை என்றால் அவைகளுக்கு எல்லை தகராறு வந்துவிடும், எனவே அதற்குப் பின் நீங்கள் சாதாரனமாக நிடக்கலாம்.

7) சில நேரங்ளில் நாய்கள் தூரத்தில் இருந்து உங்களை நோக்கி வரும்போது, அது உங்களை தான் தாக்க வருகிறது எனத் தெரிந்தால், அவைகளை நோக்கி வேகமாக நீங்கள் தாக்கப் போவது போல் நடிப்பதோ, பெரிய சத்தங்களை எழுப்புவதோ, கொம்புகளை வைத்து பலமாக தரையில் அடிப்பதோ அவைகளை ஓடச் செய்யும், பொதுவாக இதை முயற்ச்சி செய்ய வேண்டாம், முக்கியமா அவை உங்களை கோபமாக சூழ்ந்திருக்கையில் இதை முயற்ச்சிக்க வேண்டாம்

மேற் சொன்ன வழிமுறைகள் வெறி நாய்களுக்கும், இரவில் உளவும் சில மனித விலங்குகளுக்கும் பொருந்தாது!!

ஆனால் இந்த குறிப்புகள் சின்னஞ்சிறு மாற்றங்களுடன் எல்லா ஐந்து அறிவு உயிரின்ங்களுக்கும் பொருந்தும். எ.கா. புலி, சிங்கம், யானை, கரடி...... நம்முடைய பயமே அவைகளுக்கு தைரியம், நம் தைரியம் அவைகளுக்கு பயம். அவ்ளோதான். மேலும் நாய்களைப் பொருத்த வரையில் உங்கள் பயத்தை தாண்டி அவைகளை புரிந்து கொண்டீர்கள் ஆனால் இரவில் சாலையில் அவைகளை விட சிறந்த நண்பன் உங்களுக்கு இருக்க முடியாது. தினமும் இரவு ஒரு கி.மீ நடப்பவன், சில சமயங்களில் இரவில் வெளிச்சமில்லா நாய்கள் நிறைந்த காட்டுப் பாதைகளில் சென்றுள்ளேன், எனவே நீங்கள் என்னை நம்பலாம் :)


செய்தி மூலம் – அனுபவ அறிவும், கேள்வி அறிவும்

எழுதியவர் : ந.நா (4-Dec-14, 2:39 am)
சேர்த்தது : நநா தமிழ்
பார்வை : 256

மேலே