காற்றில் மிதக்கும் இறகு -கருணா

நேரம் வந்தது ..
உதிர்வதற்கு..
உதிர்ந்த இறகு நான்
உயர எழும்பினேன்..
இந்த மனிதனின் அனுபவங்கள்
என்ற இறகுகளோடு ஒன்றாய் இருந்து ..
இன்று தனியாய் உதிர்ந்தேன்..
..
இன்பம் துன்பம் இரண்டிலும்
..
இவனுக்கு துணையாய் இருந்த
நான்..இதோ..
மேலெழும்பி வலம் வருகையில் தெரிகிறது..
புதிய புதிய காட்சிகள்..
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும்
முகங்களின் அணிவகுப்பை
பார்க்கிறேன்..
பொறாமை தீயின் கங்குகளை காண்கிறேன்..
போதும் என்று மனம் கொண்டு
பொன்னான வாழ்வு வாழும்
மனிதரும்..
போக்கிரிகளாய் எதையாவது
மென்று கொண்டு
வம்பிழுக்கும்
வாய்க்கால் ஓரத்து
வானம்பாடிகளும் ஒன்றாகப் பயணிக்கும்
உலகத்தைக் காண்கிறேன் .
சேவை மனதோடு செயல்கள் புரியும்
வாழும் தெய்வங்களை பார்க்கிறேன்..
நேர்மை குணம் கொண்டு
நிமிர்ந்து வாழும் நெஞ்சங்கள் காண்கிறேன்..
அழுக்கு மனம் கொண்டு
கறை படிந்த கரம் கொண்டு
பொய்க் காவியங்கள் படைக்கின்ற
புல்லரையும் பூசிக்கும்
புதுமையையும் பார்க்கிறேன்..
இதோ..
காற்றின் திசை மாறிட
கோபுரத்தின் மீது சற்றே அமர்கிறேன்..
பின் கீழிறங்கி பறந்து வந்து
குப்பையில் வீழ்கிறேன்..
மீண்டும் எழுகிறேன்..
பறக்கிறேன்..
இன்னும் நிறைய பார்க்கின்ற
ஆவலுடன் ..
முடிவில்லா என்
பயணத்தை தொடர்கிறேன்..
எனக்கொரு முடிவு
எப்போதுமில்லை..
ஏதோ ஒன்றாய்
மாறிக் கொண்டே இருக்கிறேன்..
அதுவே படைப்பின் தத்துவம்
என்பதை அறிகிறேன்!


(பி.கு.: இத்தலைப்பில் யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்ற சுதந்திரம் தந்த தைரியத்தால் என் விருப்பத்திற்காக எழுதிய வரிகள் இவை !)

எழுதியவர் : கருணா (5-Dec-14, 10:30 am)
பார்வை : 169

மேலே