கவிஞன் நான்

காவியம் போற்றும் கவிஞனும் இல்லை
காதலை மட்டும் போற்றும் கவிஞனும்
இல்லை
நான் எழுதும்
காகிதம் போற்றுமோ......?
தெரியவுமில்லை
கண்டதை கிறுக்கும் கிறுக்கனும்
இல்லை
கண்டதை கிறுக்காது விடுவதும்
இல்லை
புத்தக வடிவில் வந்ததும்
இல்லை
புத்தி யை மறந்து வருவதும்
இல்லை
குளிர் அறை அமைத்து
குளுகுளுவென அமர்ந்து
குளிர்பானம் குடித்து
கவி மேடை ஏறி
இக்கவி பாடவுமில்லை
ஆனாலும் இறுமாப்பு
அடங்கவுமில்லை
அந்த ஒரு வழிபோக்கன்
அருமை என சொன்னானே
அந்த ஒரு நண்பன் தான்
விழியுயர்த்தி சொன்னானே
நீ யன்றோ கவிஞன் என
அது போதும் எனக்கு
மனசுக்குள்ள சந்தோஷம்
காகிதம் கொடு இன்னைக்கு
இதுதான் என் கிறுக்கு

எழுதியவர் : கவியரசன் (4-Dec-14, 10:02 pm)
Tanglish : kavingan naan
பார்வை : 121

மேலே