அவள் ஒரு மாயம்

தினம் தினம் அவளை
அந்த பஸ்ஸில் காண்கிறேன்
ஒவ்வொரு நாளும் அவளை
பார்க்கும் போது இன்று தான்
அவளை காண்பதாய் தோன்றும்

அவளிடம் அப்படி என்ன
மாயமோ ?! நான் அறியேன்
அவளிடம் தினமும் புதிதாய்
பூக்கும் புன்னகையா ? இல்லை
அரிவாள் வீச்சு போன்ற அவள்
கடைக்கண் பார்வையா ?

மனதை மயக்கும் அவள்
கூந்தல் மணமா ? இல்லை
தேன் சிந்தும் அவள்
உதட்டுச் சுழிப்பா ?
என்ன மாயமென நான்
அறியேன் சத்தியமாய் அறியேன்

கூட்டிக் கழித்துப் பார்த்தால்
அவளிடம் எல்லாம் மாயம் தான்
உண்மை சொன்னால் அவள்
மேல் எனக்கு காதல் தான்
சத்தியமாய் காதல் தான்

எழுதியவர் : fasrina (7-Dec-14, 10:35 pm)
Tanglish : aval oru maayam
பார்வை : 162

மேலே