குப்பை

நீயன்றி
நானும் குப்பை
இந்த நானிலம்
முழுதும் குப்பை

நாடி அடங்கி போகையில்
நாம் காணும்
ஜீவனெல்லாம் குப்பை
தேடிய செல்வமெல்லாம்
தீதீண்ட குப்பை

காளையாய் திரிந்தவன்
கல்யாணத்திற்குப் பிறகு குப்பை
காலணா காசு இல்லையென்றால்
கட்டியாண்ட ஜமீனும் குப்பை

மோகம் சொரியும் நடிகை
முதுமை வந்தால் குப்பை
மேகம் தொடும் கட்டிடங்கள்
லேசா அசைந்தால் குப்பை

ஆலும் குப்பை
அரசும் குப்பை
ஆளும் அரசும்
அதுவும் குப்பை

வெள்ளை சட்டை
உள்ளே இருக்கும்
உள்ளம் குப்பை
உன்னை ஆட்டிப்
படைக்கும் மதம்
அதுவும் குப்பை

எல்லாம் களைந்து
வெளியில் பார்
இருட்டு உனக்கில்லை
எம்மதமும் சாராத
பறவைக்கும் விலங்குக்கும்
இருட்டுவதேயில்லை.

நீயன்றி
நானும் குப்பை
இந்த நானிலம்
முழுதும் குப்பை

எழுதியவர் : சுசீந்திரன். (7-Dec-14, 10:35 pm)
Tanglish : KUPPAI
பார்வை : 120

மேலே