விழியதிகாரம் -12 ~~ சந்தோஷ்

விழியதிகாரம் - 12
---------------------------
மயக்கும் விழிகளால்
நீ செலுத்தும்
பார்வை நேசம்.
காதல் வாசம்.
நான்
வியக்கும் உன் முழிகளில்
நீ காட்டும்
நாட்டிய பாவனை.
காதல் தோரணை.
கருமையிட்ட உன்
இமைபுருவங்களில்
நீயிடும் வளைவானது
காதல் வில்லானது.
விழிக்காரியே..! என்
நேசத்தின் தேசியசின்னமே..!
விழி விழி என்றே
அடிக்கு அடி
அடிக்கடி
கவிதையென்று எழுதுகிறேன்.
எந்தன்
விழியுலக கண்ணகியே...!
என் விழியதிகார
கவிவரியேதும்
உன் விழியேறி
மொழியதிகாரத்தில் உன்
ரசனை நீரினை
சிந்திடவில்லையடி?
சிந்தினால் ...
காதலை சந்தித்துவிடுவோமென
அஞ்சுகிறாயா என் அஞ்சுகமே.. ?
இவன்
கவிதைக்காரன் - கற்பனை
அதிகாரக்காரன்.
கோட்டையைக்கட்டியே
நாட்காட்டியை மறந்திடுவான்
என அச்சமா என் அஞ்சலையே?
அய்யோ ..! அய்யோ ..!
அஞ்சாதே விழியாளே...!
அஞ்சினால் உன்
கொஞ்சும் விழியிரண்டில்
முழிகளாடும் நாட்டியத்திற்கு
என்னால் “ முழியதிகாரம் “
எழுதிட முடியாது...!
-இரா.சந்தோஷ் குமார்
( தொடரும்)