முந்திரிக்காடு 8
அப்புறம் சொல்றேன் தேனு ...இப்போ எல்லாரும் வூட்டுக்கு போவம் பலாரம் காப்பி தண்ணி குடிக்கலாம்'' என ஆயா சொன்னாள்...அனைவரும் சென்றனர்....காரும் பறந்தது....
இப்படியே ஒரு வாரம் கழிந்தது .....திருவிழாவும் வந்தது....அன்று பவுர்ணமி .முழு நிலா அழகூட்டினாள்
ஊரெல்லாம் ஒரே பரபரப்பானது....எல்லாரது வீடுகளிலும் மாவிலைத் தோரணங்கள் ...வாசலில் சாணம் தெளித்து மாக் கோலங்கள் பெரிது பெரிதாய் அலங்காரமாய் அழகாய் களை கட்டியது ...
மாலை நேரம்...
ஒவ்வொரு வீடுகளிலும் மண் விளக்குகள் இரவில் ஒளியேற்ற தயாராய் வீட்டு வாசலில் பொட்டிட்டு அலங்கரித்துக் மாடத்திலும் முற்றத்திலும் தெருவிலும் காத்திருந்தது.
சாமி ஊர்வலம் ..
ஒவ்வொரு வீடுகளிலும் நின்று தரிசனம் தந்து அருள் புரிந்து வந்தார் ஐயனார் சாமி ..
இரவானது எல்லோரது வீடுகளிலும் மண் விளக்குகள் ஒளியேற்றி அழகூட்டின ...ஐயனாரும் குதிரை மீதேறி வந்து கொண்டிருந்தார் ஒவ்வொரு தெரு விலும் வீடுகள் தோறும் ..
அன்று இராப் பொழுதில் சின்னராசுத் தாத்தா அந்தக் கோவிலுக்குச் சென்றார்....தேன் மொழியும் அவர் பின்னே சென்றாள் அவருக்குத் தெரியாமல்...
தாத்தா அந்த கோவிலில் என்ன பண்ணுவாரென்று ஒரு சந்தேகத்துடன்....மறைந்து மறைந்து சென்றாள்....
தாத்தா வழக்கம் போல் கோவிலுக்குச் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார்...
தேன் மொழியும் எங்காவது சன்னல் இருக்கிறதா என்று கண்டாள்... ஒன்றும் இல்லாது கண்டு ..கதவின் சிறு துவாரம் வழியே பார்த்தாள்..அங்கு அவள் கண்ட காட்சி திகைக்க வைத்தது...தன்னை இழுத்துக் கொண்டாள் யாரும் நம்மைப் பார்க்கிறார்களோ என்ற அச்சத்தில்....
மீண்டும் சாவித் துவாரம் வழியே அங்கு நடப்பதைக் காண ...அவளால் அங்கு நிற்க முடியவில்லை ...தன் உடல் முழுதும் என்னவோ செய்தது...சிலிர்த்து கொந்தளித்து ..ஆவேசத்துடன் கதவைத் தட்டினாள்... தான் என்ன செய்கிறோமென்று தெரியாமல் .....
மீண்டும் வேகமாக ஓங்கித் தட்டினாள் ...அருகில் திருவிழாவிற்கு சென்றவர்கள் எல்லோரும் இவளைக் கண்டு அங்க போகாதம்மா ...யாரும் போகக் கூடாது.....கதவைத் தட்டாதே என்று எச்சரித்தனர்..
அவர்கள் சொல்வதைக் கேளாமல் மீண்டும் தட்டிய வேகத்துடன் ....கதவு உடைத்துக் கொண்டது தேனும் அங்கே விழுந்தாள் ..விழுந்த அதிர்ச்சியில் ....கத்தினாள்..
என்ன செய்றீங்க ....அண்ணே .. வேண்டாமண்ணே ....
போதும் போதும் நீங்க ....அதக் கீழ போடுங்க என்று அதைப் பிடுங்கி போட்டாள்..ஆக்ரோசத்துடன் ஆவேசத்துடன்
எல்லோரும் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தனர்..
........................என்ன அந்த காட்சி சந்திப்போம்... அடுத்தக் காட்டில்