முந்திரிக்காடு 7

ம்ம் பெறவு சொல்றேன் வாம்மா வூட்டுக்கு போவோம் ...
வாங்க தம்பி பலாரம் காபித் தண்ணி சாப்டலாம் ..

இவ்வாறே ஒரு வாரம் கழிந்தது... அம்மன் திருவிழா வந்தது ...ஊரே ...! பந்தலும் மாவிலைத் தொரன்முமாய் ஒவ்வொரு வீடுகளிலும் ...

திருவிழா அன்று ...சித்ரா பவுர்ணமி ...ஆகையால் அன்றுதான் நிலா சோறு சாப்பிட அனைவரும் மாலை வேளையில் ஏரிக் கரை யோரம் காத்திருந்தனர் ஒரு சிலர் ... ஒரு சிலர் கோவில்களிலும்....

அன்று தாத்தாவும் வழக்கம் போல் அந்த கோவிலுக்கு சென்றார்...

தாத்தா பின்னாலேயே தொடர்ந்து வந்தால் தேன் மொழி என்கிற ஸ்மைலின் ...சன்னல்கள் எதுவும் இல்லாததால் கோவில் உள்ளே என்ன நடக்குதென்று தெரியவில்லை அவளுக்கு....அங்கும் இங்கும் தேடினாள்...

பிறகு கதவின் சாவித் துவாரம் வழியே அவள் கண்ட காட்சி .மனதை துடி துடிக்க வைத்தது...சடாரென்று தன்னை பின்னுழுத்து அங்கிருந்து நகர்ந்தாள்... அவளால் மீண்டும் அந்த காட்சியைக் காணாமல் நகர மறுத்தது அவளின் கெண்டைக் கால்கள் ....

திரும்பவும் சாவித் துவாரம் வழியே அக் காட்சியைக் கண்டாள்...உடலெல்லாம் சிலிர்த்தது...தன்னையும் மீறி கதவைத் தட்டினாள்...வேகமாக.. இன்னும் இன்னும் ஆவேசமாக ....அங்கிருந்த அவளின் செய்கையைக் கண்டவர்கள் அவளிடம் கெஞ்சிக் கேட்டனர்...அம்மா ..! நீ அங்க போகக் கூடாதம்மா ...வேண்டாம் கதவைத் தட்டாதே...என்றார்கள்....அவளும் விடுவதாக இல்லை மீண்டும் வேகமாக... அதிவேகமாக....ஆவேசமாக......

....ஓங்கித் தட்டி கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே விழுந்தாள் ....அனைவரும் கூடி நின்றனர்....
அவள் திமிறி எழுந்தவள் ...அண்ணே ...! அண்ணே..! வேண்டாண்ணே ...போதும் நிறுத்துங்கண்ணே ....என்றாள் தேன்மொழி...

அம்மா ...என்னாச்சு தேனு ... அண்ணனின்(தாத்தா ) பரிதாபம் ....

அண்ணே ! தெரிலைய்யா....நா யாருன்னு ...உங்க தங்கச்சி செல்லாயி ...நீங்க தண்டன கொடுத்தது போதும்ணே....நா வந்துட்டேன்ல....

.................................மீண்டும் சந்திப்போம் அடுத்தகாட்டில்

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (9-Dec-14, 3:21 pm)
பார்வை : 123

மேலே