காதல்
என் காதலை பற்றி
யாவுமே சொல்வதென்றால்
அது பாவமே ......
ஏழையின் காதல்
அரண்மை அறியுமா ???
காதலின் வாசனை
கண்ணுக்குத் தெரியுமா ???
மன்மதனே மனது வைத்தாலும்
மற்றவர்க்கு சொல்லியது தீராது ...
கம்பனே வந்தாலும்
கற்பனைக்கும் கட்டுபடியாகாது .
அவளைக் கண்டத்தில் இன்று
நான் சொல்லியது பாதியே ...
என் காதலின் நாயகி
கண்ணகி ஜாதியே .....!!!