பாரதி

முறுக்கு தரிக்குது மீசை முளைக்குது
தனித்துப் போரிட கைகள் துடிக்குது
துணிந்து நடந்திட கால்கள் பறக்குது
பணிந்து பயந்து தீமை விலகுது
ரௌத்திரம் கற்ற கவிராஜனின் கவிகொண்டு
போர்க்களம் புகுந்திட!
பணிந்து பயந்து தீமை விலகுது


அனல் கக்கும் நெருப்புத் துண்டுகளை
மணல் பரப்பில் பாய் விரித்து
புனல்சுனை நன்னீரைப் பருகக் கொடுத்தவன்
கானல் நீரிலும் கடல் சமைத்தவன்
கோணல் புத்தியை நாணல் கயிற்றால்
நசுக்கிப் பிழிந்தவன்


தெருக்கள் தோறும் சாதிப் பெயர்கள்
முக்குகள் தோறும் கட்சிக் கொடிகள்
ஓடி விளையாட ஒதுக்குப் புறமில்லை
தோழமை சொல்ல நேரம் கைவரவில்லை
பனிமலைக்கும் குமரிக்கடலுக்கும் பாலங்களில்லை
பசிக்கின்றவனுக்கு சகத்தை அழிக்க நீயுமில்லை


உன்னால் எப்படி முடிந்தது
அடுக்கடுக்காய் கவிதைகள் படைக்க
சுதந்திரத் தாகத்தை செந்தமிழால் தணிக்க
கண்ணியம் குறையாது காதல் சொல்ல
கடும் வார்த்தைகளின்றி கொடுமைகள் சாட
அருந்தமிழே! பெருங்கவியே!
அன்பு வணக்கம்.

எழுதியவர் : அருணன் (10-Dec-14, 10:00 pm)
Tanglish : baarathi
பார்வை : 101

மேலே