காலம்கடந்து நின்றுவருத்தும்
அன்பெனும் பூக்களை ஆசையாய்
ஆண்டுகள்பல இதயத்தில் கோர்த்துவைத்தேன்
ஏமாற்றம்கவலை என்னும் வாடியபூக்களை
தூக்கிஎறியாது போனதினால் முதலில்
குருதியில் சக்கரையும் கலந்ததுவே
நிம்மதியாய் ஓய்வுஅடையும் காலத்தில்
இதயத்தின் வாசலான ரத்தக்குழாய்களை
ஆங்காங்க்காய் அடைத்து நின்றனவே
எந்தவித கெட்டப்பழக்கங்கள் எனக்கில்லை
என்றாலும் கோபம் கவலை ஏமாற்றமெனும்
கொடியகுணங்களை நான் வளர்த்தகாரணத்தால்
காலம் கடந்து இந்நாளில் உணர்கின்றேன்
அரசன்அன்று கொல்வான்
தெய்வம் நின்றுகொல்லும் ஆனால்
கோபம் ஏமாற்றம் வருத்தம்
காலம்கடந்து எந்நாளும் வருத்தும்