பாலை வன ஏழை

ஒற்றை பனைமர அடியின் ~நான்
உட்காந்து உன்னை பார்ப்பேன்.
பார்த்த பார்வைகளே ~இன்று
பாலை வன ஏழையாக....
பசுமையான நினைவுகளை~நீ
பல தடவைகள் என்னில் சேர்ப்பாய்.
பகல் எல்லாம் வெயிலில் வெந்து~நான்
இரவில் உறங்கும் வேலை.....
கனவாக அதைத்தந்து~என்
உறக்கத்தையும் பறித்துச்செல்வாய் ........
கனவாகவே கதைகள் பேசும்
காலத்தின் கொடுமையாகவே
பாலைவன ஏழை ஆனேன்.......