இருவர் உள்ளம் -1

சுமதி ...ஏய் சுமதி ...
மணி 6.00 ஆகுது இன்னும் துங்கிட்டிருக்கா எருமைமாடு!
அத்தை மீனாட்சி கத்தும் சத்தம் கேட்டு பயந்து எழுந்தால் சுமதி !
அ...த்...தை ...சாரி அசந்து தூங்கிட்டேன்!!
ம்கும் ...இதுக்கொண்ணும் குறைச்சலில்லை இப்படி தூங்கி வழிஞ்சா வாசல் பெருக்கி பாத்திரம் தேய்த்து காபி போட உங்கப்பனா வருவான் !
சுர்...ர் ..ர் ரென்றிருந்தது சுமதிக்கு…
அத்தையிடம் அதற்க்கு மேல் பேச ஆசையின்றி மெதுவாய் படுக்கையை உதறி மடித்து வைத்து கலைந்த தலையையும் உடையையும் சரி செய்து கொண்டு மெதுவாய் நகர்ந்தால் வாசல் நோக்கி ...
அவளை நகரவிடாது வழிமறித்தால் அத்தை மீனாட்சி!
நில்லுடி !
என்ன நான் கேட்டுகொண்டிருக்கேன் நீ பாட்டுக்கு போற என்ன ? திமிரா உனக்கு?
அத்தை கையை உதறிவிட்டு ஒன்றும் பேச முடியாமல் ``எல்லாம் என் தலைஎழுத்து" !என தனக்குள் முணுமுணுத்து கொண்டே வாசலை சுத்தம் செய்ய ஆரம்பித்தால் ...
வட்டமுகம் நெட்டையும் இல்லாமல் குட்டைஎன்றும் சொல்ல முடியா சராசரி உயரம் மெல்லிய வளைவுகள் கொண்ட மேனி வனப்பு எலும்பிச்சை நிற அழகில் எவரையும் வளைக்கும் கண்கள் ... கண்கள் அதிஷ்ட கண்ணென்று சொல்லும் நடிகை மீனாவின் கண்களை நினைப்பூட்டும் பழைய நடிகை பூர்னிமாவை நினைபூட்டும் அழகி சுமதி !
வடிவுக்கரசி போலவே இருக்கும் அவளத்தை மீனாட்சி !அப்பாவின் தங்கை !
சுறுசுறுப்பாய் இயங்கிக்கொண்டிருந்தாள் சுமதி !
ஐயோ !அதற்குள் மணி 7;30 ஆயிடுச்சே !
மாமா எட்டுக்கு டான்னு ஆபீஸ் கிளம்புவார் அதற்குள் டிபன் ரெடிபன்னனும் அப்புறம் அத்தை மகள் மல்லிகா கல்லூரிக்கு கிளப்பணும் அவளுக்கு தலைவாரி சுடிதாரை அயன்பன்னி டிபன் கட்டி வண்டியை துடைச்சி வைக்கலனா அவ்வளவுதான் அத்தை பேயாட்டம் ஆடுவாங்க !!
இப்ப என்னபன்னுரதுனு தெரியாமால் பதட்டத்தில் உடலெல்லாம் வேர்வை குளியலில் வேகத்தை கூட்டினால் சுமதி !
அத்தை வீட்டில் சம்பளமற்ற வேலைகாரியாய் தினம் தினமும் ...

மீனாட்சி மெல்ல மல்லிகா அறைக்கு சென்றால் ...
மல்லி ....கண்ணு மல்லி மணி எட்டாவ போவுது செல்லம் எழுந்திரிம்மா !
இங்க பாரு காபி கொண்டுவந்துருக்கேன் .குடிச்சிட்டு அப்புறமா ப்ரஷ் பண்ணிட்டு கிளம்புடா ...காலேஜ் போக நேரமாயிடுமில்ல ...
ம்..ம்..ம் ..ஹுகும் என்னமா ? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிட்டு எழுந்திருகிறேனே
பட்டுகுட்டி உனக்கு அம்மா சுடுதண்ணி வைக்கச் சொல்லிருக்கேன் புது சுடிதார் வாங்கி வச்சுருக்கேன் ...இப்பவே எழுந்தா தானே கிளம்ப முடியும் ப்ளீஸ் என் செல்லம்ல எழுந்திரிம்மா !
பன்னீர் ரோஜாவாட்டம் அழகு முகம் மெதுவாய் எழுந்து நெட்டி முறித்தால் இரு கை தூக்கி மெதுவாய் ...
அம்மா அருகில் அமர்ந்து தன் தோளில் சாய்த்து கொண்டு மெதுவாய் பரிசித்து கூந்தலை விரலால் கோதி செல்லமாய் முத்தமொன்று தந்து மார்போடு அனைத்து கொண்டால் மகள் மல்லிகாவை ...டேபிளில் வைத்திருந்த காபி கோப்பையை கையிலெடுத்து மல்லிகாவின் தலையை நிமிர்த்தி பருக கொடுத்தால் ...
என்னமா நீ? நானென்ன இன்னும் சின்ன குழந்தையா என்ன ?

அம்மாடி! நீ எனக்கு எப்பவுமே செல்லக் குழந்தைடா நீ !
அப்போது ....
வாசலில் அழைப்பு மணி ஒலித்தது ...
டிங் டாங்....டிங்...டாங்க் ....டிங் டாங்க்....
அவசரமாய் கதவை திறக்க சென்றுகொண்டிருந்தாள் சுமதி !
கதவில் பொருத்தியிருந்த லென்ஸ் வழியாக ஒருகண்ணை பதித்து வெளிநோக்கி பார்வை செலுத்தினால்...
வெளியே ...
வாட்ட சாட்டமாய் ஒரு உருவம் தலையில் குல்லா பொருத்தி கையில் கம்பொன்று வைத்துகொண்டு உடலுக்கு மாப்ளரும் அரைகால் சாட்ச்சும் காலுக்கு சூ வும் போட்டுகொண்டு பார்பதற்கு ரானுவீரனை போல் வாட்டச்சாட்டமாய் நின்று கொண்டிருந்தது பார்வைக்கு வயது நாற்பதிருக்கும் லென்சில் பார்த்துகொண்டிருந்த சுமதி பட்டென கண்ணை அதிலிருந்து விலக்கி முகம் மலர்ந்தால் ...தாழ்பாளை விலக்கி கதவை திறந்தாள் அது யாருமில்லை அவள் மாமா மோகன் ...

அதிகாலையில் எழுந்து வாக்கிங் சென்று திரும்புவது மோகனின் வழக்கம் .

அம்மாடி சுமதி ! இன்று என்ன ஸ்பெஷல் !

மாமா ...இடியப்பம் தேங்கா பால் டிபின்ல கட்டிடவா இல்லை சாப்பிட்டு கிளம்புவிங்களா?

அம்மாடி நான் குளிச்சிட்டு கிளம்பத்தான் டைம் இருக்கு அதால டிபின்ல கட்டிடும்மா ?

அம்மாடி உன்னை நினைத்தாலே ரொம்ப கஷ்டமா இருக்குமா !நீ எப்படி வாழ வேண்டியவ இப்படி வந்து கஷ்டபடுறியே!
அதற்கென்ன பண்ணுறது மாமா !கடவுள் விட்ட வழி !

மெதுவாய் பாத்ரூமுக்குள் நகர்ந்தார் மோகன் ...
(தொடரும் ...)

எழுதியவர் : கனகரத்தினம் (15-Dec-14, 11:37 pm)
சேர்த்தது : கனகரத்தினம்
பார்வை : 169

மேலே