கருவேலமரம் - சிறுகதை

எங்க ஊர் கம்மாகரை நடுவுல உள்ள கருவேல மரத்துக்கும் என்னக்கும் சின்ன வயசிலிருந்து நெருங்கிய பந்தம் உண்டு . ஊற விட்டு தனியா கம்மாகரை நடுவுல கம்பீரமா நிக்கிறதே ஒரு அழகுதான். எவ்வளவு வெயில் அடித்தாலும் எப்போதும் பசுமையாதான் இருக்கும்.
படிக்கிற வயசுல தேர்வு நேரத்துல புத்தகத்தை எடுத்துகிட்டு போய் கருவேல மரத்து அடியில்தான் உட்கார்ந்து படிப்போம் . குறிப்பா எனக்கு அந்த இதமான காற்று, அமைதியான சுழல் ரெம்ப பிடிக்கும்.
நாளடைவுல கருவேல மரதடிகிட்ட உட்கார்ந்து படிச்சாதான் நல்ல மதிப்பெண் பெறுவது போல தோன ஆரம்பிச்சது . போக போக எல்லா விஷயத்திலையும் தொடர்ந்தது .
வீட்டுல அம்மா, அப்பா திட்டினா நேரா கம்மாகரைக்கு கிளம்பிடுவேன் . போய் மரத்தடிக்கு கீழே அமைதியா உட்கார்திருவேன் . இதமாய் வீசும் காற்றில் என் மனம் குளிர்ந்து விடும் .
ஆரம்பத்துல சிகரெட் ,பீர் அடிகிறப்போ ஊருக்குள யாருக்கும் தெரியாம இருக்க கம்மாகர கருவேலமரதடிக்குத்தான் வாங்கிகிட்டு போவேன் .
படிச்சு முடிச்சு வெளிநாடு போய் நாலஞ்சு வருஷம் கழித்து வந்ததும் வராததும் ஒரு சிகரெட் பாக்கெட்டை எடுத்துக்கிட்டு கிளம்பிட்டேன் கம்மாகரைக்கு . இவனுக்கு வேற வேலை இல்ல என்று அம்மா வாசகம் கூட காதில வாங்கலே
அங்க போய் உட்கார்த்து ஒரு சிகரெட்டை எடுத்து பத்தவச்சு புகைய ரசிச்சு வெளியே விட்டேன் . என் காற்றுக்கு எதிர் கற்றா ? என கேட்பது போல் கருவேல மரத்தின் இதமான காற்று மோதி நகைத்தது. வெகு நாள் கழித்து வந்த விருந்தாளியை வரவேற்பது போல் என் மீது தன் மஞ்சள் நிற பூக்களை பொழிந்தது .
முறைபொண்ணு செல்வி கம்மாகரைக்கு துணி துவைக்க வரையில கருவேல மரத்தடியில இருந்து நோக்கி நோக்கி சரி கட்டியாச்சு.இப்போ மணிகணக்கா உட்கார்த்து கடலை போடற பூங்கா நம்ம கருவேல மரந்தான்.. ஒரு நாள் பேசிகிட்டு இருக்கைல பசக்குன்னு ஒரு இச் கொடுத்துப்புட்டேன் . ச்சி போ நாளைக்கெலாம் வரமாட்டேன்னு சொலிட்டு போனவ . மறு நாள் என்க்கு
முன்னாடியே வந்து நிக்கிறா....
அப்பறம் கல்யாணம் ரெண்டு பசங்க . பசங்க படிச்சு சென்னைல செட்டில் ஆகிட்டாங்க.வேலை பாக்குற எடத்துலேயே புடிச்ச பொண்ண கல்யாணம் பண்ணீட்டாங்க .

ஒரு நாள் லேசா நெஞ்ச வலிக்குதுன்னு சொன்ன செல்வி பொசுக்குன்னு என்ன தனியா பொலம்ப விட்டுட்டு போய்ட்டா. வாழ்க்கைல ஒரு வெற்றிடம் உருவானது போல ஒரு மாதிரியா பித்து பிடித்தது போல இருந்தது. பசங்க கூட சென்னைக்கு வந்துடுங்கன்னு கூப்பிட்டாங்க .எனக்கு போக பிடிக்கல .மனசுக்கு கஷ்டமாய் இருக்கும் போதெல்லாம் கருவேல மரத்தடியில் போய் சத்த நேரம் உட்கர்ந்தா மனசு லேசானது போல இருக்கும்

காலம் ஓடிபோச்சு . தோல் சுருங்கி வயோதிகம் வந்தாச்சு ..

ஒரு மழை நாள்

மேகம் கருத்து ,மழை வரும் போல் இருந்தது . மனசு ஏனோ இருக்கமா இருக்கிற மாதிரி தோனுச்சு .

குடை எடுத்துகிட்டு கிளம்பிட்டேன் கம்மாகரைக்கு . போய் கருவேல மரத்தில் சாய்ந்து உட்கார்ந்து மரத்தின் தண்டை ,வேரை தவி பார்த்தேன் .மரம் பட்டு போய் உளுத்து கொட்டும் நிலை. என்னை விட்டு நீயும் பிரிசிருவியோன்னு ஏக்கமாய் மரத்தை பார்த்தேன் . மரம் இல்லை என்று தலை ஆட்டுவது போல் காற்றில் ஆடியது . மறுகணம் கனத்த சப்தத்துடன் ஒரு இடி .....

இப்ப நானும் கருவேல மரமும் கருகி ஒன்றாய் சங்கமிதிருந்தோம் .

இப்பவெல்லாம் எங்க ஊருக்குள ஒரு வதந்தி ....டேய் பசங்களா கம்மாகர பக்கம் போகதிகட . இடி விழுந்த கிழவன் ஆவி அந்த கருகிப்போன கருவேலமரதுல சுத்துதாம் ...

பாவம் அவர்களுக்கு என்ன தெரியும் ..எனக்கும் கருவேலமரதுக்கும் உள்ள பந்தம் ...

- வைரா

எழுதியவர் : (16-Dec-14, 6:59 am)
பார்வை : 340

மேலே