தோல்வியுற்ற காதலர்களுக்கீ

தோற்று போன
ஒவ்வொரு உண்மை காதலுக்காக....
அவள் அவனோடு அவளுடைய
காதலை பகிர்ந்தாள்.....!
அதற்கு அவன் சொன்னான்
''என்னை மறந்துவிடு , என்னால்
உன்னை காதலிக்க முடியாது,
இதை வேறு யாரிடமும் போய்
சொல்...''
என்று...!
இதை கேட்டதும் வருத்தப்பட்ட அவள்
ஒரு கடிதத்தை அவனின் கையில்
கொடுத்தாள்...
''என் ஞாபகம் வரும் போது இந்த
கடிதத்தை பிரித்து படியுங்க''
என்று சொல்லிவிட்டு ஒன்றும்
பேசாமல்
திரும்பி சென்றுவிட்டாள்...!
நாட்கள் பல கடந்தன.....
மெல்ல மெல்ல அவளுடைய
காதலை புரிந்து கொண்டான்
அவன்...!
அவளை பார்க்க விரும்பிய அவன்,
அவள் வரும்
இடங்களுக்கு வந்து அவளுக்காக
காத்திருந்தான்...
அவளின் College வாசலில்
காத்து நின்றான்...
அவளின் தோழிகளிடம்
அவளை பற்றி விசாரித்தான்...
பின்னர் தான்
தெரிந்து கொண்டான் அவள்
திரும்பி வரமுடியாத இடத்தில்
இருக்கிறாள் என்று...!
அன்று தான் அவள் கொடுத்த பழைய
கடிதத்தை அவன்
படித்து பார்த்தான்...
அதில் எழுதிய வார்த்தைகள்
அவனின் இதயத்தை வெடிக்கச்
செய்தது...
''உனக்காக துடித்த இதயம்
வேறு யாருக்காகவும் துடிக்க
வேண்டாம்''
அதை நெஞ்சோடு சேர்த்து வைத்து கண்ணீருடன்
அழுதான்...!
ஆனால் அவளோ திரும்பி வர
முடியாத இடத்தில்...!!

எழுதியவர் : விக்கி (16-Dec-14, 7:43 am)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 367

மேலே