அவள் மான் தேன்

அந்த மான்
-----அவள் விழியில்
இன்பத் தேன்
------அவள் இதழில்
சொந்தம் கொண்டாடுவது
-------என் மனதில் !

அந்தக் காற்று
-----பூந் தென்றல்
தென்றலில் சிரிக்குது
------பூ மலர்கள்
சொந்தம் கொண்டாடுவது
-----அவள் கூந்தல் !

அவள் விழியின்
------பார்வையில் காதல்
காதலில் இதழ்கள் புரியுது
----- மென் புன்னகை
அவள் புன்னகையில்
----விரியுது என் கவிதை
அந்தக் கவிதையை கொண்டாடுவது
-----அவள் நெஞ்சம் !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (16-Dec-14, 10:59 am)
Tanglish : aval maan thaen
பார்வை : 187

மேலே