வாழ்க்கை
வாழ்க்கையே ஒரு காதல் ...........
வாழ்க்கையில் ,
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காதல் ஞாபகமாக இருக்கும் .
சிலருக்கு ,
தன் சந்தோஷத்தை நமக்குனு கொடுத்த ,
அம்மாவோட காதலாக இருக்கலாம் .
ஒரு சிலருக்கு ,
தன் உழைப்பை பாசமாக வழங்கும் ,
தந்தையின் காதலாக இருக்கலாம் .
இன்னும் சிலருக்கு ,
உயிரை கூட பகிர்ந்தளிக்கும் ,
நட்பின் காதலாக இருக்கலாம் .
மற்றும் சிலருக்கு ,
ஒருவருக்காக ஒருவர் காத்திருந்து ,
மழையின் தூறலில் நனைந்து ரசித்து ,
chocolate கொடுத்து உதட்டினில் நகைத்த ,
காதலியின் காதலாக இருக்கலாம் .
இதில் எந்த காதலாக இருந்தாலும் ,
வார்த்தையின் அர்த்தம் ஒன்றுதான்...
இதுபோல ,
ஒவ்வொரு காலகட்டத்திலும் ,
ஒவ்வொரு காதல் தேவைபடுகிறது .
எந்த ஒரு மனிதனும் ,
இதைபோல் எந்தவித காதலுமின்றி ,
என்றும் இருக்க முடியாது .இந்த காதலை ,
வாழ்க்கையின் பின்னே நின்று ரசித்து பார்த்தால் ,
அதுவும் ஒரு சுகமான சுமையாக தான் இருக்கும்