இனி பூமி மெல்ல சாகும்
மூச்சு திணறி
கழுத்திருகி
துடி துடிக்கிறது
பூமி,
வெப்பக் காற்று
வெற்றுத் தூசியாய்
பரிதவிக்கிறது.....
சுவாசிக்க
ஒரு மரம் இல்லை...
யோசித்த
ஒரு மனிதனும் இல்லை....
இனி தோண்ட,
ரத்தம் தான்
குழாய் வழியே
தெறிக்கும்....
வாகன சத்தம் தான்
இரத்த குழாய்
வெடிக்க வைக்கும்....
தட்ப வெப்பம்
மாறச் செய்தோம்...
கால நுட்பம்
மாற்றி நெய்தோம்....
விளை நிலங்கள்
கொலை கலங்கள்...
நெல்லும் புல்லும்
செங்கல்கள்.....
அடுக்குமாடி கல்லறைகள்
வீடென்ற புது சிறைகள்...
விலை பெருக்க
மலை அழித்தோம்
மலை அழிய
மழை தொலைத்தோம்....
காடான பூமி
வீடானது....
வீடான பூமி சூடானது...
சூடானது,
சூரியன் ஓடானது....
உயிர்த் தேடல்
உருக்குலைய,
பரிணாமம்
மனப் பிறழ்வை
விதைக்கத் தொடங்கி விட்டது....
இனி
பூமி
மெல்ல சாகும்...
கவிஜி