கிறிஸ்துமஸ்
கிறிஸ்துமஸ் என்பது
கிறிஸ்து பிறப்பு நாள்
கிறிஸ்தவ மக்களின் மிக
உன்னதமான திருநாள்
அன்பின் மகனாக
அனைவருக்கும் மீட்பராக
பச்சிளம் பாலகனாக
பிறந்த இயேசு கிறிஸ்து
அமைதியின் சமாதானத்தின்
அற்புத குழந்தையாக அவதரித்தார்
அவர் பிறந்தது மார்கழிப் பனியில், கடும் குளிரில்
அதுவே நாம் கொண்டாடும்
கிறிஸ்துமஸ் பெருநாள்
அன்னை மரியின் அன்புக் குழந்தையாக
அவர் பிறந்துமாட்டுத் தொழுவம் ஒன்றில்
வைக்கோலின் அணைப்பில்
ஏழைக் குழந்தை போல் கிடத்தப் பட்டார்
அவர் ஏழை அல்ல அகிலம் முழுவதும்
அரசாளப் பிறந்த அன்பு மகன்
அவருக்கு ஏன் இந்த நிலை
அன்றும் இன்றுபோல் உலகில் ஒரு சில இடங்களில்
கொடுங் கோல்ஆட்சியும் நிலவியது
தலைச்சன் பிள்ளையாகப் பிறக்கும் ஒவ்வொரு
ஆண்பிள்ளைளையும் கொலை செய்ய
ஏரோது மன்னன் கட்டளை இட்டிருந்தான்
அதனால் அன்னை மரியாள் பேறு காலத்தில்
ஒளிந்து வாழ்ந்தார்
அப்போது தான் குழந்தை இயேசு
பிறக்கும் காலம் நெருங்கி விட்டது
செய்வது அறியாது திகைத்த
அன்னை மரியாளும் அவர் துணைவர் சூசையும்
இந்த மாட்டுத் தொழுவத்தை தயார் படுத்தினர்
அந்த நள்ளிரவில் அன்புத் தெய்வ மகன் பிறந்தார்
அந்த இரவை அந்த நல்ல நாளை
கொண்டாட நாம் பேறு பெற்றவர்களாக
இருக்க வேண்டும் நாம் அதற்கு
நாமே நம்மைத் தயார் படுத்திக் கொள்வோம்
அன்புக்காக அமைதிக்காக மீட்பதற்காக
மனிதனாக மண்ணுலகில் அவதரித்தார்
அவர் வார்த்தைகள் உண்மை உள்ளவை
அணுகுவோம் அன்பான இயேசுவை
அல்லல் இன்றி வாழ்ந்திட
அன்புக் கரங்களால் அணைத்தே காத்திடுவார்
அன்பே வடிவாம் கிறிஸ்து
அடைவோம் அவர் அருள்
பெறுவோம் வாழ்வில் அமைதி