முன்னேற்றம்

மன்னேற்றம்ன்னா இப்படித்தாண்டா இருக்கணும்.
நீ என்ன சொல்லறே. எனக்கு ஒண்ணுமே புரில.
என் நண்பனோட தாத்தா வயித்துப் பொழப்புக்காகத் தெருக் கூத்தாடி.
அவனோட அப்பா நாடக நடிகரானார். கொஞ்சம் மரியாதையும் பணமும் கெடச்சது.
என் நண்பனுக்கு அதிர்ஷ்டக் காத்து வீசி நடிகனாகிட்டான். அவனுக்கு நடிக்கத் தெரியாட்டாலும் அவன் எந்தக கொரங்குத்தனம் கோமாளித்தனம பணணினாலும் அதை ரசிச்சு ஸ்டைல்ன்னு சொல்லறாங்க. என் நண்பன் இப்ப ரசிகர்களுக்கு இதய தெய்வம். அவன் படத்துக்குப் பாலாபிஷேகம் எல்லாம் செய்யறாங்க. அவன என்ன சொன்னாலும் அதைச் செய்ய ரசிகர்கள் வெறித்தனமா இருக்காங்க.
ஒரு கூத்தாடியின் பேரன் இதய தெய்வமா இலட்சக கணக்கான ரசிகப் பெருமக்களின் இதயங்களில் கொலுவீற்றிருக்கறது முன்னேற்றம் இல்லையா?