சிரிப்பு
மனது இலகுவாகும்
புருவ நெழிவு மாறும்
அமைதி அருகில் அமர
சமரசம் சாமரம் வீசும்
நேசம் கரம் நீட்டும்
பகை பதறி போகும்
தாமரை இலை போல
சுகதுக்கங்கள் உருண்டோடும்
இவை போல இன்னும் பல
அடைய அனுமதி சீட்டு
சிரித்த முகத்தின் புன்முறுவல்
சந்தோஷத்தின் அறைகூவல்