உழவனும் மனிதனும் - உதயா

உழவன்..

பிறந்த முதல்
இறக்கும் வரை
இரத்ததை வியர்வையாக
சிந்திதான் உழைக்கிறான்

காலம் வந்தும்
வருணன் வராததால்
வானத்தை நோக்கியே
பாக்கிறான்

அவன் வருவானோ
வரமாட்டானோயென மழைக்காக
காத்திருந்து காத்திருந்தே
காலம் கழிக்கிறான்

மீத்தேனு திட்டமொன்னு
கொண்டு இங்கு வந்ததால
வரவிருந்த மழையும்
இனி வராதுனு நினைக்கிறான்

மனிதன்.......

விளை நிலத்தையெல்லாம் அழிக்கிறான்
புது வீடாக கட்டுறான

ஆனா அவன்
விளைவித்த உணவையெல்லாம்
இரசிச்சி இரசிச்சி சமைக்கிறான்
ருசிச்சி ருசிச்சி உண்ணுறான்

வறுமையென்னும் சாபத்தாலும்
உழைக்க நிலமில்லாதாலும்
மண்ணோடு மண்ணாக சாகுறான்
மனிதன்
இத்தனையும் சேதியாக
சேனலை மாத்தி மாத்தி பாக்குறான்

விடியும் வரை
தூங்குறான்
விடிந்த பின்னும்
ஏசி அறையில்
தூங்க கிளம்புறான்

உழவன் - மனிதன்........

உழவன்
உழைத்து உழைத்து
வாழுறான்
இனி உழைக்க
வழியேயில்லெனு சாகுறான்

மனிதன்
எல்லத்தையும் பாக்குறான்
செய்தியாவும் கேக்குறான்
கண்ணீரையும் கடன் சொல்லிதான்
அவன் கல்லறைக்கு அனுப்புறான்...

எழுதியவர் : udayakumar (23-Dec-14, 5:14 pm)
பார்வை : 61

மேலே