பெயர் மாற்றம் தரும் இலாபம்

என்னடா உன்னோட பிரியாணிக்கடைப் பேரை ஸ்ரீபிரியாணி ஸ்தல்ன்னு மாத்திட்ட?

அட நானும் கடைக்கு நல்ல தமிழ்ப் பேர்களை வச்சுப்பாத்தேன். சுமாராத் தான் வருமானம். என்னோட நண்பன் ஒருத்தன் சொன்னான் “டேய் வியாபாரம் செய்யறவங்க கடைப் பேரைத் தமிழிலெ வைக்கக் கூடாது. அது மாதிரி பிள்ளைகளுக்கும் தமிழ்ப் பேர வச்சா ஆசிரியர்கள் (வாத்தியாருங்க) சந்தோஷப்படமாட்டாங்க. பிள்ளைகளை வித்தியாசமாத் தான் பாப்பாங்க”ன்னு சொன்னான். அது எவ்வள்வு உண்மைங்கறது இப்பத்தான் தெரியுது. எம் பிரியாணிக் கடைப்பேர ஸ்ரீபிரியாணி ஸ்தல்ன்னு மாத்தினதுக்கப்பறம் நல்ல வியாபாரம் நடக்குது.





குறிப்பு: என் பிள்ளைகள் இருவருக்கும் நல்ல தமிழ்ப் பெயர்கள். (நகரில் உள்ள பிரபலமான பள்ளிகளில் சேர்த்த போது (அதுவும் குறிப்பாக அந்தப் பெண்கள் பள்ளியில்) அங்குள்ள அட்மிஷன் கமிட்டி உறுப்பினர்கள் ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். நான் பிள்ளைகளுக்கு இந்திப் பெயர்களைச் சூட்டி இருந்தால் “ஸ்வீட் நேம்” என்று சொல்லியிருப்பார்கள். தமிழர்களில் 98% பேருக்கு மொழிப் பற்றும் . தமிழர் என்ற இனப்பற்றும் கிடையாது. அதனால் இங்கு பொழுது போக்கு பைத்தியங்களும் அதிகம். மலையாளிகளைப் பார்த்து நாம் திருந்த வேண்டும். தமிழ் நாட்டில் இருப்பதைப் போல சினிமா வெறியர்கள் அங்கு கிடையாது). .

எழுதியவர் : மலர் (23-Dec-14, 8:05 pm)
பார்வை : 144

மேலே