அழகு

கட்டளைக் கலித்துறை

தாயிக் கழகு குழந்தைக் குணவினைத் தானளித்தல்
சேயிக் கழகு செயலில் உயர்வழி சென்றிடுதல்
வாயிக் கழகு வதைப்பினும் சத்திய வாக்குரைத்தல்
காயிக் கழகு கனிந்தபின் இன்சுவை காட்டுதலே !

தந்தைக் கழகு மகனுக் குநன்மை தருவதிலே
சிந்தைக் கழகு உயரிய நேர்வழி சிந்தைசெய்தல்
சந்தைக் கழகு பலபொருள் தன்னுளே சாற்றிடுதல்
மந்தைக் கழகு தனைமேய்ப் பவன்சொல் மதிப்பதிலே !

தளிருக் கழகு பசுமை நிறத்தில் தளைத்திடுதல்
ஒளியுக் கழகு இரவினும் வீசியே ஓங்கிடுதல்
களிறுக் கழகு செருக்களம் வென்று களிப்புறுதல்
வளியுக் கழகு சினமெனின் ஊரை வளைத்தலதே !

காற்றுக் கழகு நறுமணம் தன்னைக் கவர்ந்துவரல்
ஆற்றுக் கழகு விளைநில மேட்டினில் ஆடிவரல்
ஊற்றுக் கழகு எழிலுற மண்ணில் உருவெடுத்தல்
நேற்றுக் கழகு வரலா றினைத்தரும் நேர்த்தியதே 1

பணியிக் கழகு அறவழி தன்னில் பணம்வளர்த்தல்
மணியிக் கழகு கலகல வென்றே முழங்குதலே
துணியிக் கழகு உடுப்ப திரண்டெனும் தூமொழியில்
அணியிக் கழகு கவியை அழகாய் அமைத்தலிலே !

----தொடரும்

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (25-Dec-14, 4:29 pm)
பார்வை : 78

மேலே